HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

30.06.2009

ஊவா மாகாணசபை, யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றின் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி இன்றுடன் நிறைவு.


வன்னி மக்களின் அவலங்கள் தொடர்பான செய்திகள் உள்ளே

 

கப்டன்அலி பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது

கப்படன் அலி கப்பலில் இருக்கும் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

 


இன்றைய செய்தித் தலைப்புகள்                         

 

30.06.2009

29.06.2009

29.06.2009

29.06.2009

29.06.2009

29.06.2009

29.06.2009

29.06.2009

29.06.2009

29.06.2009

29.06.2009

கப்டன்அலி பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது

பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் சிக்கல்

ஜப்பானின் விசேடதூதுவர் இலங்கைவந்துள்ளார்.

நாட்டில் புலிகள் உருவாக இடமில்லை

உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல்

முகாம்களில் இருந்த ஆதரவற்ற சிறுவர்கள் .....

சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு சட்டநடவடிக்கை

தமிழர் விடுதலை கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம்

பிரித்தானியாவில் அமைதி ஊர்வலம்

முகாம்களில் இருந்து இரு புலிஉறுப்பினர் கைது

தமிழ் இளைஞர் 900ம் பேர் இராணுவத்தில் இணைவு

   

இடம்பெயர்ந்த மக்களுக்கு அன்புக்கரம் நீட்டுவோம்

 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டும் காயங்களுக்குள்ளாகி வவுனியா மன்னார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் உள்ள மக்களின் உணவு உடை மருத்துவம் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் நாமும் கரம்கோர்த்து எமது பங்களிப்பை வழங்குவது கட்டாய கடமையும் உடனடி தேவையுமாகும்.
இவ்வாறு உதவ விரும்பும் அனைவரும் நீங்கள் வாழும் நாடுகளிலுள்ள பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டு;கின்றோம்.

 

கட்சி பொதுச் செயலாளருடன் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள்

0094 112 505372 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 


இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட வேண்டும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்  பொதுச்செயலர் ரி. சிறிதரன்.


இலங்கை வானொலி தென்றல் ஒலிபரப்பில் 17.05.2009 ஞாயிறு இரவு நடைபெற்ற் 7வது நாள் நிகழ்ச்சியில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் தெரிவித்த  கருத்துக்கள்


 

தியாகிகள் தினம் 2009
 

 

தமிழ் பேசும் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தமது உயிரை அர்ப்பணித்த எமது தோழர்கள், சக இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் வகையில் தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளின் மேலதிக விபரங்களுக்கு.
 

30.06.2009, 08.30 AM

 

கப்டன்அலி பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது

கப்படன் அலி கப்பலில் இருக்கும் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர் இந்த பொருட்களை ஏற்க அனுமதி அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டதை அடுத்து இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினை தொடர்புகொண்டு இது குறித்து பேச்சு நடத்தியுள்ளனர். இதன் போது இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் இந்த பொருட்களை ஏற்க இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொருட்களை வேறு கப்பல் மூலம் இலங்கைக்கு எடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை சென்னையில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

29.06.2009, 09.30 PM

 

பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் சிக்கல்

இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இருப்பினும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது என இடர் முகாமைத்துவ மற்றம் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சிறிய நாடு என்பதனாலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாகவும் இந்த நிலமை ஏற்பட்டுள்ளடதாகவும் எனவே இந்த அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு கீளேயே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பயங்கரவாதம் அழிந்துள்ள நிலையில் அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படவேண்டும் என்பதனை அரசு உணர்ந்துள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே சாத்தியமான விடயம் என்பதால் அது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இதை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து சிக்கல் நிலை தோன்றியுள்ளது. மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது சாத்தியமற்றது என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். கடந்த காலங்களில் யுத்தம் வடக்கு கிழக்கில் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. நாட்டில் சுமூகமான சூழல் ஏற்படும் போது அது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

29.06.2009, 09.05 PM

 

ஜப்பானின் விசேடதூதுவர் இலங்கைவந்துள்ளார்.

ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மீண்டும் இலங்கைக்கு இன்று (29.06.2009) வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இது 19வது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த விஜயத்தின் போது அரசியல் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

29.06.2009, 08.40 PM

 

நாட்டில் புலிகள் உருவாக இடமில்லை

இலங்கையில் புலிகள் மீண்டும் உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். புலிகள் நாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதனால் அதனை ஒருபோதும் அனுமக்கிக போவதில்லை. நாட்டில் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் மறைந்து வாழும் குமாரன் பத்மநாதன் உள்ளிட்டோர் புலிகள் என கூறிக்கொண்டு சட்டவிரோதமாக செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் அறிக்கைகள் குறித்து நாங்கள் கவனத்தில் கொள்ப்போவதில்லை. எமது பணியினை சிறப்பாக செய்து முடித்துள்ளளோhம். நாட்டை சிறந்த முறையில் பாதுகாப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

26.06.2009, 08.15 PM

 

உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல்

 

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பத்திரிகை இயங்க அனுமதிக்க போவதில்லை என தெரிவித்து அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டை பாதுகாக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என தெரிவித்து இந்த துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

29.06.2009, 04.30 PM

 

முகாம்களில் இருந்த ஆதரவற்ற சிறுவர்கள் வவுனியா

கோவில்குளம் சிவன் கோயில் முகாமிற்கு அனுப்பிவைப்பு

இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள ஆதரவற்ற சிறுவர்கள் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அருளகம் சிறுவர் இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் 129 சிறுமிகள் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் மூலம் சிறுவர் நன்நடத்தைப் பிரிவினரின் பொறுப்பில் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சிறுவர் இல்லத்தில் ஏற்கனவே 100 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் என தனித்தனியான இடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் வைரவப்புளியங்குளத்தில் உள்ள சிறுவர் இல்லத்திற்கு சிறுவர்கள் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

27.06.2009, 04.10 PM

 

சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு சட்டநடவடிக்கை

பாதுகாப்பு தரப்பினரிடம் தஞ்சமடைந்துள்ள புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இவர்களுக்கு நாட்டில் தற்பொழுது அமுலில் இருக்கும் சட்டங்களுக்கு அமைவாக உரிய நடவடிக்கை எடக்கப்படும் தவிர இவர்களுக்கென புதிதாக ஒரு நீதிமன்ற கட்டமைப்பை அமைக்கவேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதா அல்லது தண்டனை வழங்குவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். மேலும் புலிகளினால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு எதிராக மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

தனிநாடு கோரி கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாட்டிற்குள் வழளர்சியடைந்த புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் உட்பட அனைத்து உறுப்பினர்களும் படையினரின் மனிதாபிமான நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கையினை மேற்கொள்ளவென சிறு சிறு குழுக்களாக மறைந்திருந்த புலி உறுப்பினர்கள் தற்பொழுது படையினரிடம் சரணடைந்து வருகின்றனர். பலர் நலன்புரி நிலையங்களில் இருந்து படையினரால் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறாக சில நாட்களில் மட்டும் 9000ம் புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இவர்கள் தற்பொழுது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். புலிகள் இய