HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

10.03.2011தோழர் புஸ்பராசாவை நினைவு கூரூகிறோம்

தோழர் புஸ்பராசா அவர்கள் மறைந்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவர் தனது 55 வது வயதில் 10.03.2006 இவ் உலகைவிட்டுப் பிரிந்தார்.
தனது மரணத்தின் நாள் முன் கூட்டியே சிலநாட்களுக்கு முன் அவருக்கு தெரிந்திருந்தது. வெடி மருந்து வீச்சமில்லாத தாயகத்தின் தெருவில் தனது பிள்ளைகள் உலாவும் காலம் வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.

மாணவர் -இளைஞர் பேரவைகளினூடாக தமிழ் தேசிய அரசியலில் பிரவேசித்த புஸ்பராசாவும் அவர் சகோதரி புஸ்பராணியும் 1970களின் முற்பகுதியில் வதைமுகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் .

இலங்கைத் தமிழர் வரலாற்றில் அரசியல் காரணங்களுக்காக சித்திரவதை செய்தல் கொலை செய்தல் ஆரம்பமான காலம் இது.

சிங்கள இளைஞர்கள் மீது சமகாலத்திலேயே சித்திரவதைகள் ஆரம்பித்திருந்தன.

ஆரம்பத்தில் அஹிம்சை சத்தியாக்கிரக இயக்கங்களில் பங்கு பற்றிய, முன்நின்று நடத்திய புஸ்பராசா அன்றைய ஈழத்தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

பின்னர் 1970களின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலை இயக்கத்தை உருவாக்கியவர்களில் (தற்போதைய ரெலோ அல்ல) புஸபராசாவும் ஒருவர். தோழர் வரதராஜப்பெருமாள் போன்றவர்கள் இவரின் சகபாடிகளாக இருந்தனர்.

1974 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் பின்னர் தீவிர செயற்பாட்டாளராக மாறியிருந்தார்.

அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் அன்றைய தமிழ் அரசியலின் போதாமை அவருக்கு விரக்தியை ஏற்படுத்தியிருந்தது

1980களின் முற்பகுதியில் அவர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்து சென்றார்.
அதே காலப்பகுதியல் பிரான்சுக்குப் போவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புஸ்பராசாவும் நானும் குன்சியும் ஒருமத்தியானம் கீரிமலையிலிருந்து புறப்பட்டு மாலை வேதாரணியம் கரையில் இறங்கினோம்.

இரவு வேதாரணியம் சவுக்கந்தோப்பொன்றில் தங்கிவிட்டு மறுநாள் காலை தஞ்சாவூரில் தோழர் புஸ்பராசாவிற்கு அறிமுகமான தந்தை பெரியாரின் கொள்கைகளில் தீவிர் ஈடுபாடு கொண்ட குடும்பம் ஒன்றுடன் தங்கிவிட்டு சென்னை சூளைமேடு வகாப்தெருவிற்கு வந்துசேர்ந்தோம்.

இலங்கை அரச பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்தியா வந்திருந்த சில இளைஞர்களும் அங்கிருந்தார்கள்.

தோழர் பத்மநபா எவிடன்ஸ் (நுஎனைநnஉந) பத்திரிகைக்களித்த பேட்டியில் புஸ்பராசா புஸ்பராணி ஆகியோரின் பங்களிப்பு பற்றிய பந்திகளை காண்பித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் அவர் பிரான்சிற்குச் சென்று விட்டார்.

நீண்டகாலம் அவரை ஒரு தேசியவாதியாக அறிந்திருக்கிறேன்.

1980களின் முற்பகுதியில் அவர் ஈபிஆர்எல்எப் உடன் நெருங்கிச் செயற்பட்டார். பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி வந்த பலருக்கு அவர் உதவியிருக்கிறார்.

காலஞ்சென்ற தோழர் உமாகாந்தன் ,புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் போன்றவர்களுடன் அவர் நெருக்கமாகச் செயற்பட்டிருக்கிறார்.

1980 களில் அவர் பிரதானமாக தேசியவிடுதலையுடன், தீண்டாமை பெண் அடிமைத்தனம் -விழிம்புநிலை மக்கள் தொடர்பான அக்கறைகளும் அவரின் நிகழ்ச்சி நிரலில் சேர்ந்துகொண்டன.

கட்டுரை, சிறுகதை, கவிதை என அவர் பல ஆக்கங்களை எமுதியிருப்பதாக அறிகிறேன். ஒரு சிலவற்றை அவ்வப்போது வாசித்துமிருக்கிறேன்.

அவரது குடும்ப சூழலில் அவரது மனைவியார் மீரா, சசோதரி புஸ்பராணி ஆகியோரின் பங்களிப்பும்- உறுதுணையும-; அனுபவமும் முக்கியமானவை என அறிகிறேன்.

கடந்த 2 தசாப்தங்களுக்கு மேலாக ஐரோப்பிய வடஅமெரிக்க புலம்பெயர் தளத்தில் நிகழ்ந்து வந்த இலக்கியச் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு எழுத்துக்கள் பரிமாறல்கள் அவர் மேல் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

தவிர தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் அடிக்கடி சென்று சமூக இலக்கியப்பிரக்ஞை உள்ள மனிதர்களுடன் அவர் தன்னைப் பரிச்சயப்படுத்தியிருக்கிறார்.

அவர் வெடிமருந்து வீச்சமில்லாத தெருக்களை வேண்டினார். ஆனால் அவர் நேசித்திருக்கக் கூடிய அவரது ஊர் மயிலிட்டி இன்னும் உயர்பாதுகாப்பு வலயமே. சொந்த கிராமம் -அதன் வாழ்வும் வளமும் அழிக்கப்பட்டு விட்டது என்ற வலி இருக்கிறதே அது பயங்கரமானது.

எமது சமூகத்தில் பலரது அனுபவம் போலவே அவரும் உற்ற, சுற்றம,; உறவுகளை இழந்திருக்கிறார்.

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம; என்ற அவரது அனுபவத்தொகுப்பு ஈழத்திலும,; தமிழகத்திலும், புலம்பெயர்தளத்திலும் நன்கு அறியப்பட்டது.

இப்போது அவரது ஆக்கங்கள் சிலவற்றை பிரசுரிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக அறியப்படுகிறது.

தமிழ் தேசிய சமூக இயக்க வரலாற்றில் தோழர் புஸ்பராசா அவர்களுக்கும் குறிப்பிடத்தகுந்த இடமுண்டு. அவரின் கனவான வன்முறை ஒழிந்த சுதந்திரமுழ் சமத்துவமும் சமாதானமும் நிலவும் வாழ்வு மெய்ப்படவேண்டும்.

-சுகு-

 


செய்தித் தலைப்புகள்                         

 

06.01.2011

06.01.2011

இலங்கை தமிழர் ஒரு தேசிய இனமல்ல அவர்கள் சுயாட்சி கோரமுடியாது

படையினருக்கு தெரியாமல் குடாநாட்டில் அசம்பாவிதங்கள் நிகழ முடியாது

   

 

 

சர்வதேச பெண்கள் தினம்

சவால்களை எதிர்கொண்டு முன் செல்ல சில கருத்துக்கள்


சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய அளவில் நினைவு கூரப்படும் நிலையில் இலங்கையில் பெண்கள் நிலையையும் ,பால் சமத்துவமின்மையையும் எண்ணிப்பாhர்க்க வேண்டும்.
இலங்கை யுத்தத்தில் மரணமடைந்தவர்கள் போக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகவே இருக்கின்றன.
இவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்குகிறார்கள் .பாலியல் தக்குதல்கள் வீட்டிலும் வெளியிலும் இவற்றையும் தாண்டி வீட்டின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி இன்னோரன்ன விடயங்களுக்கான தேவைகளுக்காககவும் அலைய வேண்டியருக்கிறது
சிறையிலுள்ள பிள்ளைகளின் விடுலைக்காக சிறப்பு முகாகளுக்கும் சிறைகளுக்கும் இவர்களே பெரும்பாலும் செல்ல வேண்டியிருக்கிறது.

 

மேலும்

 

17.01.2011

 

இன மத குல பேதங்களை மறந்து, சுயலாபம் கருதாது ஒன்றிணைந்து செயற்பட்டால் அபிவிருத்தி பாதையில் முன்னேற முடியும் யாழ் பொங்கல் விழாவில் ஜனாதிபதி
 

 

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து உங்கள் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. குறிப்பாக இங்கு அதிகளவான மாணவர்கள் வருகை தந்திருக்கின்றனர்.. நமது நாட்டின் மீது நாம் அன்பு செலுத்தும் அதேவேளை எமக்கே உரித்தான கலாசார விழுமியங்களிலும் அன்பு செலுத்த வேண்டும். கலாசாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை எமது சந்ததியினையும் பாதுகாத்துப் பேண வேண்டிய கட்டாயம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

இவ்வாறு இன்று (17.01.2011) யாழ் துரையப்பா விளையாட்டரங்கில், நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 30 வருடங்களாக இப்பகுதியில் பின்தங்கியிருந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படுவதுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

வடக்கு, கிழக்கு என்றில்லாமல் மாபிஃயா எங்கும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது உள்நாட்டில் ஒன்றும் சர்வதேசத்தில் இன்னொன்றுமென கருத்துக்களை முன் வைத்து சில சக்திகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டின் மீதும், மக்கள் மீதும் அக்கறை கொண்டவர்களாக அனைவரும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

நாமெல்லோரும் இலங்கைத் தாய் நாட்டின் ஒரே பிள்ளைகள் என்பதுடன் இன மத வேறுபாடுகளின்றி ஒரே சந்ததியான மக்களாகவும் வாழும் போது யாழ் மாவட்டம் மட்டுமன்றி முழு நாடுமே அபிவிருத்தி அடையும். அனைத்து மக்களும் இன மத வேறுபாடு இன்றி வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டியது இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களதும் இலக்காக இருக்க வேண்டும். குறுகிய அரசியல்லாபம் கருதி செயற்படாமல் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படும் போதுதான் இங்கு விரைவான அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்.

ஐக்கிய இலங்கையில் ஒன்றுபட்டு வாழும் சூழலைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டும். யாழ்ப்பாணம் துரையப்பா
விளையாட்டரங்கில் பொங்கல் விழா மேடையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ. பி. டி. பி. என அனைவரும் மக்களுக்காக இணைந்துள்ளோம். இதே போன்று மக்களுக்காக சேவை செய்வதில் நாம் ஒன்றுபட்டு செயற்படுதல் அவசியம். என ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்து யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த உழவர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்திய அரசினால் வழங்கப் பெற்ற உழவு இயந்திரங்களில் சிலவற்றையும் ஜனாதிபதி உழவர்களிடம் வழங்கினார்.

வடபகுதியிலுள்ள 34 இந்து ஆலயங்களின் புனரமைப்புக்கென தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 34 இலட்சம் ரூபாவை மாவட்ட அரச அதிபரிடம் ஜனாதிபதி கையளித்தார்.

2010 2011 ஆண்டுகளில் கூடுதல் புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய 100 மாணவர்களில், 10 மாணவர்களுக்கு ஜனாதிபதி மடிக் கணனிகளை வழங்கினார்.
 


சங்குபிட்டி பாலத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

 

வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பிரித்தானிய நிதியுதவி மூலம் 1032 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சங்குப்பிட்டி பாலம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இப்பாலத்தின் நீளம் 288 மீற்றர். அகலம் 7.4 மீட்டர் பூநகரியையும் யாழ்ப்பாண நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் இரு வழிப்பாதையாக இப்பாலம் அமைந்துள்ளது. கொழும்பிலிருந்து சிலாபம், புத்தளம், மன்னார் ஊடான இப்பாதையில் யாழ்ப்பாண குடாநாட்டுக்குப் பயணம் செய்வோர் ஏ 9 பாதையினூடாக செல்வதைப் பார்க்கிலும் சுமார் 120 கிலோ மீற்றர் தூரத்தை மீதப்படுத்திக் கொள்ள முடியும்.

திறப்புவிழா வைபவத்தில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி சங்குப்பிட்டி பாலம் இன்று திறக்கப்பட்டதன் மூலம் வடக்கு மக்களின் நீண்ட காலக் கனவு நனவாகியுள்ளது.

கடந்த காலங்களில் பொன்னம்பலம் போன்றோர் இந்தப் பாலத்தை நிர்மாணித்துத் தருவதாக மக்களுக்கு தேர்தல் காலத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். எதிர்கால சந்ததிக்காக ஐக்கிய இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு. அவர்கள் இந்த நாட்டில் சந்தேகம், பயமின்றி வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம். அதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளோம். மக்களுக்கான அபிவிருத்திகளை, தேர்தல் வாக்குறுதிகளாக்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
வடக்கு மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி எமது அரசாங்கம் சில வருடங்களுக்குள் நாடளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாம் எப்போதுமே சொல்வதைச் செய்பவர்கள். அதே போன்று செய்வதையே சொல்பவர்கள் என்றார்.

மக்களாகிய நீங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது தாய்நாட்டை ஆசியாவின் உன்னத நாடாகக் கட்டியெழுப்பு வோம் எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.


கிழக்கில் வெள்ளம் வடிகிறது;
249 நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டன


மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம்களில் 249 தற்காலிக முகாம்கள் மூடப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட மழை மற்றும் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த மக்களைத் தங்கவைப்பதற்கு 594 தற்காலிக முகாம்கள் திறக்கப்பட்டிருந்தன. இவற்றில் தற்பொழுது 249 முகாம்கள் மூடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 275 முகாம்களில் 157, 649 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவற்றில் தற்பொழுது 34 முகாம்கள் மூடப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் முன்னர் 169 முகாம்களில் 157,649 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது முகாம்களின் எண்ணிக்கை 22 ஆகக் குறைந்திருப்பதுடன், 2 ஆயிரத்து 569 குடும்பங்களைச் சேர்ந்த 10,544 பேரே முகாம்களில் இன்னமும் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைவிட திருகோணமலை மாவட்டத்தில் இன்னமும் 34 முகாம்களில் 15,700 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 24 முகாம்களில் 1261 பேரும் முகாம்களில் தங்கியிருப்பதுடன், அநுராதபுர மாவட்டத்தில் அமைக்கப்பட்ட அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வருவதால் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் வீடுகளுக்குத் திரும்பி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.

 

 

16.01.2011

 

ஜனநாயகம் என்பது தேர்தலில் மட்டும் நின்றுவிடாது எல்லா விடயங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். -வரதராஜப் பெருமாள்
 

வடக்கு கிழககு மாகாண முன்னாள் முதலமைச்சரும், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் மூத்த தலைவருமான தோழர் அ.வரதராஜப்பெருமாள் தினகரன் வாரமஞ்சரிக்கு வழஙகிய நேர்காணல். நேர் கண்டவர்கள்: சுஜப் காசிம்.

 

பெயர் : அ. வரதராஜப் பெருமாள்
பிறந்த திகதி : 1953 ஜூன் 08
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
பாடசாலை : கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம் (ஆண்டு 10 வரை)
க.பொ.த. உயர்தரம் (தனியார் நிறுவனம்)
பதவிகள் : யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்
வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
கல்வித்தகைமை : யாழ். பல்கலைக்கழகம் (பொருளியல் சிறப்பு)
அரசியல் விஞ்ஞானம் (
M. A) டெல்லி பல்கலைக்கழகம்
L. L. B.(டெல்லி)
பிள்ளைகள் : 3 பெண்கள்
1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றமை.


கேள்வி:-
தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்aர்கள்?

பதில்:- கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக இந்நாட்டை உலுக்கி வந்த கோர யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது மிக நல்ல விடயம்.

யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட அழிவுகள், சிதைவுகள், சீரழிவுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நாம் ஒரு முன்னோக்கிய கால கட்டத்தில் போக வேண்டிய சூழல் இன்றுள்ளது.

புனர்வாழ்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. மக்கள் மத்தியில் பீதியற்ற ஒரு சூழல் உருவாக வேண்டும். ஜனநாயகம் என்பது தேர்தலில் மட்டும் நின்றுவிடாது எல்லா விடயங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். போர் சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் மக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் துரித வேலைத்திட்டங்கள் தேவை. ஜனாதிபதியும் அரசாங்கமும் இதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டு வருகின்ற போதும் இன்னும் வேகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஆளுங்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே ஒரு ஜனநாயக பூர்வமான, நாகரீக பூர்வமான ஓர் அச்சமற்ற உறவு வளர்ச்சியடைய வேண்டும். அரசியல் நாகரீகம் மேலோங்கியுள்ள ஒரு நாடு என்ற வகையில் ஒரு மனப்பக்குவம், அரசியல் முதிர்ச்சி ஆகியவை நமக்கிடையில் வளர்ந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இவை படிப்படியாக மாறும் என்றே நான் நம்புகின்றேன்.

கேள்வி:- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல் என்பவற்றை நீங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கின்aர்கள்?

பதில்:- இவை மக்கள் மத்தியில் பயபீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றை நீக்க வேண்டிய முதற் பொறுப்பு அரசுக்கு உண்டு. குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி மக்களுக்கு ஒரு பயம் ஏற்படாத வண்ணம் கருமங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்தச் சம்பவங்களை வெளியில் கொண்டு வரக்கூடிய பொறிமுறை அரசாங்கத்திடமே இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்களை தொகுத்து பார்க்கும் போது வெறுமனே அரசியலற்றது என்று சொல்வதற்கில்லை. தனிப்பட்ட கொலைகள், கொள்ளைகள் நடந்திருக்கும் அதேவேளை அரசியலும் ஏதோ வகையில் கலந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அங்கு இடம்பெறும் சம்பவங்களை தனிப்பட்ட மோதல்களின் விளைவுகள் என்று கூறுவது சரியானதல்ல. இது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் கூற்றுமல்ல. ஏனெனில் அங்கு வாழும் மக்களுக்கு நடைபெறும் விடயங்கள் தெரியும். மக்கள் மத்தியில் பயப்பீதியை அதிகரிப்பதில் ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. மக்களுக்கு அதிகரிப்பதில் நம்பிக்கை வழங்க வேண்டிய அரசியல்வாதிகள் பயப்பீதியை ஏற்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். 30 வருடங்களாக யுத்த வெறியர்களுக்குப் பயந்து பயந்து வாழ்ந்த மக்களுக்கு இப்போது இடம்பெறும் சம்பவங்கள் இன்னும் பாதிப்பையே ஏற்படுத்துகின்றது. மீண்டும் பழைய நிலை வந்து விடுமோ என்ற அச்ச உணர்வும் அவர்களிடம் உள்ளது. எனவே இந்த நிலையை மாற்றுவதற்கு அனைவரும் உதவ வேண்டும்.

 

 

 

15.01.2011

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஓரணியாகவும் ஏனைய தமிழ்க்கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுவது தமிழ்மக்களுக்கு  நல்லதல்ல  வீ;. ஆனந்தசங்கரி, 

தற்பொழுது தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பெரும் துன்பங்கள் அவலங்களுக்கு தீர்வுகாண வேண்டுமாயின் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டியது அவசியம் என்பதனை நாம் உணர்ந்துள்ளோம். அதன் அடிப்படையில் அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்றும் அதன் மூலம் பலமிக்கதொரு அழுத்தத்தை நாம் அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் கருதுகின்றோம். அதற்கு அடித்தளமாக பல வேறு குரோதங்களையும் மறந்து எதிர்வரும்உள்ளுரட்சி தேர்தலில் அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து போட்டியிட்டால் அது பெரும் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்க்கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமைக்காக ஈடுபட்ட அனைவருக்கும் தமிழர் விடுதலை கூட்டணி முழு ஒத்துழைப்பiயும் வழங்கி வந்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணிஇ தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்)இ பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஜனவரி 1ம் திகதி கொழும்பில் கூடி தமிழ்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து ஒரு பாரிய கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டியதின் அவசியத்தை தீர்மானித்தோம். இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசுவதாயும் ஈபிடீபி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் அழைப்பு விடுவதெனவும் தீர்மானித்தோம். அதனடிப்படையில் ஈபிடீபியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆர்வம் காட்டாமையினால் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் முதற்கட்டமாக திரு.சித்தார்த்தன் அவர்களும் பின்னர் திரு சிவாஜிலிங்கம் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல காத்திரமான உடன்பாடுகளில் ஆர்வம் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து 14ம் திகதியன்று நான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடன் பேசினேன். தமிழ் மக்களின் துயரமான நிலைமைகளையும் தமிழ்க்கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையையும் வலியுறுத்தியது மட்டுமல்லாது தமிழரசுக் கட்சியின் பெயரையும் அதன் சின்னமான வீட்டுச்சின்னத்தையும் அனைவருக்கும் பொதுவானதாகவும் ஏற்க நாம் தயாராக இருப்பதாக தெரிவித்தேன்.

தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட்வேண்டியது எமது மக்களுக்கு அவசியமானது ஒன்று என்பது இன்று அதற்கான நிலைமைகளும் உருவாகியுள்ளன. இதைத் தவறவிடுவது தமிழ் மக்களுக்குச் செய்யும் பெரும் கேடாக அமைந்து விடும் என்பதனை அனைத்துத்தரப்பிற்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த தேர்தலில் நான் ஒரு வேட்பாளராக எந்தவொரு உள்ளுராட்சி மன்றத்துக்கும் போட்டியிடப் போவதில்லை என்பதனையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஓரணியாகவும் ஏனைய தமிழ்க்கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுவது தமிழ்மக்களுக்கு நல்லதல்ல என்பதனையும் உணர்ந்து தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் விரைந்து எமக்கு தமது முடிவினைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.

 

வெள்ள நிலைமைகளை அவதானிக்க

அமைச்சர் பசில் ராஜபக்ஸ மட்டக்களப்பிற்கு விஜயம்

 

வெள்ள நிலைமைகளை அவதானிக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று (15.01.2011)மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார். அவருடன் இந்திய உயர் ஸ்தானிகர் அலோக் பிரசாத் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர உட்பட உயர் மட்ட குழுவினர் விஜயம் செய்தனர்.

மாவட்டத்தின் வெள்ள நிலவரம் குறித்த உயர்மட்ட மாநாடு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் பிரதியமைச்சர்களான வி.முரளீதரன் பஷீர் சேகு தாவுத் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாகாண அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்து மக்களை பார்வையிட்டனர்.

 

14.01.2011


கிழக்கில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட

மக்களுக்கு இந்திய அரசின் உதவி நேற்று அனுப்பி வைப்பு


வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கவென இந்திய அரசாங்கத்தின் முதல் தொகுதி நிவாரணப் பொருள்கள் நேற்று (14) விமானம் மூலம் கொண்டுவரப் பட்டன.

110 மில்லியன் ரூபாய் பெறுமதியான 25 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் விசேட விமானத்தின் மூலம் நேற்றுப் பகல் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது.

இவற்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்திய அரசின் சார்பில்இ இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா நிவாரணப் பொருள்களை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.

பருப்புஇ சீனிஇ போர்வைஇ தண்ணீரை சுத்தமாக்கும் மாத்திரைகள்இ குடிநீர்இ பாய் போன்றவை அடங்கிய இந்த முதல் தொகுதி நிவாரணப் பொருள்களை விமானப் படையினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களில் முதற் கட்டமாக 1280 கிலோ கிராம் உணவுப் பொருட்கள் விமானப் படையின் ஐ. எல். 76 ரக விமானம் மூலம் அனுப்பப்பட்டதோடு ஏனைய உணவுப் பொருட்கள் கட்டம் கட்டமாக பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 318இ 500 பேருக்கு விநியோகிக்கவென 63 மெட்ரிக் தொன் உலருணவுப் பொருள்களும்இ அம்பாறையில் பாதிக்கப்பட்ட 153இ 500 பேருக்கு 191 மெட்ரிக் தொன்களும்இ திருகோணமலை மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு 50 மெட்ரிக் தொன்களும் பொலன்னறுவை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 13 ஆயிரம் பேருக்கு 16 மெட்ரிக் தொன்களுமாக அரிசிஇ சீனிஇ பருப்புஇ மரக்கறி எண்ணெய் ஆகிய பொருள்கள் அடங்கிய 320 மெட்ரிக் தொன் உலருணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்


09.01.2011

 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண கூட்டமைப்பு

அரசுடன் பேசும் அலரிமாளிகையில் நாளை சந்திப்பு

அரசியல் தீர்வு தொடர்பாக ஆராய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் அரசாங்க தரப்பு பிரதிநிதிகளும் நாளை (10.01.2010) முதல் முறையாக சந்தித்து பேச ஏற்பாடாகியுள்ளது. நாளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்துப் பேசுவதற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அரசாங்க தரப்பில் முன்னாள் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அகியோர் இடம்பெறவுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவில் இடம்பெறுவர் என அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த போதும் சுகவீனம் காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் இரா.சம்பந்தன் தவிர்ந்த ஏனையோர் கலந்துகொள்வர் என தெரியவருகின்றது.


உரும்பிராயில் மேலும் ஒருவரை காணவில்லை

உரும்பிராய் சந்தியில் செருப்பு தைக்கும் தொழில் செய்துவரும் சின்னத்துரை குகதாசன் (வயது 47) என்பவரை நேற்று முன்தினம் (07.01.2011) முதல் காணவில்லை என அவரது மனைவி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஏற்கனவே உரும்பிராயில் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டதுடன் ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் இப்பகுதியில் இடம்பெற்ற 3வது சம்பவமாகும்.

 

 

08.01.2011

 

தைப்பொங்கல் யாழ் நகரில் அரச விழாவாக ஏற்பாடு

இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான தைப்பொங்கல் பண்டிகையை யாழ்ப்பாணத்தில் பெரும் விழாவாக கொண்டாட சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறது. எதிர்வரும் 15ம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ் மத்திய கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது.

அன்றைய தினம் புனர்வாழ்வு முகாம்களில் உள்ள முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை விடுவிக்கவும், யுத்தம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ங்களுக்கு உதவிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகரும், பொங்கல் விழா ஏற்பாட்டுக் குழு உறுப்பினருமான சிவலிங்கம் சதீஸ்குமார் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் கலை கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் இலங்கை இந்திய கலைஞர்களின் இன்னிசைக்கச்சேரியும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விழாவில் அமைச்சர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவின் சார்பில் சி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
 

 

07.01.2011


உள்ளுராட்சி சபைகள் கலைப்பு

உள்ளுராட்சி சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் அத்தாவுள்ல்லா இத்தகவலை வெளியிட்டுள்ளார். . நாட்டிலுள்ள 330 உள்ளுராட்சி சபைகளில் 308 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரசபை வவுனியா நகரசபை உள்ளிட்ட 18 உள்ளுராட்சி சபைகள் தவிர ஏனைய உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடாத்தப்பட உள்ளது.
 

06.01.2011

 

இலங்கை தமிழர் ஒரு தேசிய இனமல்ல அவர்கள் சுயாட்சி

கோரமுடியாது ஜாதிக ஹெல உருமயவின் சட்ட ஆலோசகர்

தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் ஒரு தேசிய இனம். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அல்ல அவர்கள் சிறு மக்கள் பகுதியினர் மட்டுமேயாவர். அதாவது ஜப்பானில் உள்ள கொரியர்கள் தாய்லாந்தில் உள்ள சீனர்கள் போன்றவர்கள். அவர்கள் சுய நிர்ணய உரிமையையோ, சுயாட்சியையோ கோரமுடியாது என ஜாதிக ஹெல உருமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாணசபையின் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முன் நேற்று (05.01.2011) சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


படையினருக்கு தெரியாமல் குடாநாட்டில் அசம்பாவிதங்கள்

நிகழ முடியாது கூட்டமைப்பு எம்பி மாவை சேனாதிராஜா

யாழ் குடாநாட்டில் கடந்த இரண்டு மாத காலமாக இடம்பெற்று வரும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொள்ளைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அங்கு நிலைகொண்டுள்ள படையினர் அறியாத வகையில் நடந்தேறுவதற்கு சாத்தியமே இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நோற்று (05.01.2011) தெரிவித்து;ள்ளனர். இவ்விடத்தில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு;ம் எனவும் இவைபற்றி பிரதமர் இந்த நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கேரியுள்ளார்.

யாழ் குடநாட்டு அசம்பாவிதங்கள் தொடர்பில் கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றும் போதே கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்த கவனயீர்ப்பு பிரேரணைக்கு உடனடியாக பதிலளிப்பதற்க அரச தரப்பு மறுத்துவிட்டது. பிரேரனையின் பிரதி எமக்கு முன் கூட்டியே வழங்கவில்லை எனவும் இவை தொடர்பாக ஆராய்ந்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனவும் சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

 

05.01.2011

புதுவருடத்தில் தேசியகொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்து

கடமைகளை ஆரம்பித்தனர் யாழ் குடாநாட்டு அரச ஊழியர்கள்

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் போது அரச ஊழியர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கடமைகளை ஆரம்பிக்குமாறு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்திருந்த பணிப்புரைக்கு அமைவாக கடந்த 3ம் திகதி யாழ் குடாநாட்டில் உள்ள அரச அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைத்து சத்தியப்பிரமாணம் செய்து கடமைகளை ஆரம்பிக்கப்பட்டன. யாழ் மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் உதவி அரசாங்க அதிபர் பணிமனைகள் மற்றும் அரசு ஸ்தாபனங்களிலும் பாடசாலைகளிலும் இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

அரச அலுவலர்கள் அனைவரும் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் ஊழியர்கள் என்ற வகையில் மக்களுடைய தேவைகளை நிறைவு செய்யவும் மனித நேயத்துடன் மக்களை நடாத்தவும் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட வேண்டும் என்ற சர்ச்சை நிலவியபோதும் மேற்படி வைபவத்தின் போது அரச திணைக்களங்களில் தேசிய கீதம் இசையில் ஒலிக்கவிடப்பட்டது.


சர்வதேச தமி;ழ் எழுத்தாளர் மாநாடு

சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது என சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் அறிவித்துள்ளது. நாளை (06.01.2011) ஆரம்பமாகும் நிகழ்ச்சிகள் எதிர்வரும் 9ம் திகதி வரை கொழும்பு தமிழ்சங்க மண்டபத்தில் நடைபெறும். ஆய்வரங்குகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாள் நிகழ்ச்சிகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.


04.01.2011

அதிகரித்து வரும் கொலை கொள்ளை ஆட்கடத்தல் போன்ற

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை - யாழ் அரச அதிபர்

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், சமூக அக்கறையுள்ளவர்களையும் உள்ளடக்கிய உயர் மட்ட மாநாடு ஒன்றை நடாத்த உத்தேசித்துள்ளேன் என யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (03.01.2011) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் வந்தவண்ணமுள்ளன. குறிப்பாக பெண் பிள்ளைகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் மதுபோதையில் பலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை நானே நேரில் அவதானித்துள்ளேன்.

மக்கள் எதிர்நோக்கும் இத்தகைய பிரச்சினைகளை தடுத்து நிறுத்த பொலிஸாரினதும், இராணுவத்தினரதும் உதவியை நாடியுள்ளேன். இவ்வாறு அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.


புலி உறுப்பினர்கள் 703 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தைப்பொங்கல் தினத்தில் 100 புலி உறுப்பினர்கள்
விடுதலை


இராணுவத்தினரிடம் சரணடைந்த சிரேஷ்ட புலி உறுப்பினர்கள் 703 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்கு தலைமை தாங்கியமை, குண்டுத்தாக்குதல்களை நடாத்தியமை, புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஓமந்தையில் உள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட மாட்டாது இவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வழக்கு தொடரப்பட்டு இவர்களுக்கு தண்டனை விதிக்கபடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்கள் 100 பேர் விடுவிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர்கள் எதிர்வரும் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியார் சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த 11 ஆயிரத்து 696 புலி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 5 ஆயிரத்து 586 முன்னாள் புலி உறுப்பினர்கள் இதுவரை கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் 24 புனர்வாழ்வு முகாம்கள் இருந்தன இப்போது 9 புனர்வாழ்வு நிலையங்களே செயற்படுகின்றன. புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 761 முன்னாள் புலி உறுப்பினர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர் எனவும் பிரிகேடியார் சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.


03.01.2011

புதிய வாக்காளர் இடாப்புக்கள் பொதுமக்களின் பார்வைக்கு

கடந்த 25 வருடங்களின் பின்னர் திருத்தம் செய்யப்பட்ட புதிய வாக்காளர் இடாப்புக்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை இன்று 3ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 31ம் திகதி வரை பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்கள், பிரதேச சபைகளில் பொதுமக்கள் பார்வையிட முடியும். இவை தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் இக்காலப்பகுதியில் மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக படிவங்களை வழங்கி உரிய இடங்களில் இல்லாதவர்கள், வெளிநாடுகளில் வாழ்பவர்கள் உரிய படிவங்கள் மீள நிரப்பிக் கொடுக்காதவர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு இவ்வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நீக்கப்படும் பெயர்கள் அடங்கிய ஏ நிரல் பட்டியலும் புதிதாக இணைக்கப்படும் பெயர்கள் அடங்கிய பி நிரல் பட்டியலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


திருமலையில் நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள

மக்கள் அடைமழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு

மூதூர் கிழக்கில் சொந்தக் கிராமங்களி;ல் மீளக் குடியமர அனுமதிக்கப்படாது நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1300 குடும்பங்கள் அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என இடம்பெயர்ந்தோர் சங்கத் தலைவர் கமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிவெட்டியில் 570 குடும்பங்களும், மணற்சேனையில் 90 குடும்பங்களும், பட்டித்திடலில் 230 குடும்பங்களும் கட்டைபறிச்சானில் 372 குடும்பங்களும் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களின் சொந்தக் கிராமங்கள் சம்பூர் அனல் மின்நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலயத்துள் வருவதால் இவர்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை எனவும் இவர்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்படும் எனவும் அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனை ஏற்க மறுத்து இக்குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர்.

முச்சக்கரவண்டி சாரதியை காணவில்லை

உரும்பிராய் சிவகுல வீதியை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான எஸ்.கோபிநாத்; (வயது 27) என்பவரை கடந்த 1ம் திகதி முதல் காணவில்லை என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரவு 7 மணியளவில் கைத்தொலைபேசி அழைப்பொன்றை அடுத்து முச்சக்கரவண்டி தரிப்பிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற இவர் தரிப்பிடத்திற்கு திரும்பவில்லை என இதர முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்துள்ளனர். எப்போதும் இரவில் வீடு திரும்பும் இவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது கையடக்க தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


 

02.01.2011

 

கிழக்கில் கொட்டும் மழை 3 இலட்சம் மக்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொட்டும் மழையினால் 1 இலட்சத்து 2 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3 இலட்சத்து 86 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த 579 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 477 பேர் 65 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

உறவினர்களதும் நண்பர்களதும் வீடுகளில் 15 ஆயிரத்து 809 குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரத்து 84 பேர் தங்கியுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சர் துலிப் விஜயசேகரா நேற்று (01.01.2010) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து பாதிப்புக்கள் குறித்து தெரிந்துகொண்டார்.


பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான நிலத்தில் ஹோட்டல்

காலிமுகத் திடலுக்கு முன்பாக இராணுவ தலைமையகம் அமைந்திருந்த பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம் 7 நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்காக ஹொங்கொங்கை தளமாக கொண்டு இயங்கும் சங்ஹிரி-லா நிறுவனம் கொள்வனவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்விடத்தை 125 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (1400 கோடி ரூபா) மேற்படி நிறுவனம் கொள்வனவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தலைவர் நாலக கொடஹேவா இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
சங்ஹிரி-லா நிறுவனத்துக்கு இலங்கை முதலீட்டு சபை அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் ஐஸ் உற்பத்தி ஆரம்பம்

யாழ் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் 4ம் குறுக்கு தெருவிலும், பருத்தித்துறை இன்பருட்டியிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஐஸ்கட்டித் தொழிற்சாலைகள் பரீட்சார்த்தமாக உற்பத்தியை ஆரம்பித்துள்ளன.

இத்தொழிற்சாலைகள் 30 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் 4ம் குறுக்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திடமும் இன்பருட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை வடமராட்சி கடற்தொழிலாளர் சங்க சமாசத்திடமும் ஒப்படைக்கப்படவுள்ளன.
 

 

01.01.2011

 

புதுவருட நம்பிக்கை

புதுவருடம் பிறக்கிறது பிறக்கப் போகிறது என்ற செய்தி மனிதரிடையே உற்சாகத்தையும் தென்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும்

இன மத குல பேதங்களுக்கு அப்பால் இந்த நம்பிக்கை மனிதர்களை ஒன்றிணைக்கிறது.

இந்த புதுவருட கனவுகளை எதிர்பார்ப்புக்களை நிஜமாக்குவது அரசியல் சமூக தலைமைத்துவங்கள் மற்றும் ஆர்வலர்களின் கடமை

மானிடராக பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பார்கள் இந்த மானிடர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்பதும் அத்தகையதே

இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்தால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீள் கட்டியெழுப்புவது

ஆதரவற்றுப் போன பிள்ளைகளுக்கு அரவணைப்பையும் பரிவையும் நல்குவது

குடும்பத்தலைவரை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கை சுமுகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைவதற்கு ஏற்பாடு செய்வது

என பல கடப்பாடுகள் இருக்கின்றன.

இரண்டு தசாப்தத்திற்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயங்களாகி போன தமது நிலங்கள் மீளக்கிடைக்கும்

தமது அன்றாட வாழ்க்கையில் நிலவும் இராணுவ மயப்பட்ட சூழல் நீங்கும்

இயல்பாக எமது சமூக பொருளாதார நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வதற்கான சூழ்நிலை உருவாகும்

எமது வழிபாட்டு தலங்கள் எமது வாழ்விடங்கள் மீதான ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் நீங்கும்

கொலை கடத்தல் பாலியல் பலாத்காரம் போன்ற வன்முறைகள் இனிமேலும் நிகழாது எமக்கு பாதுகாப்பான வாழ்க்கை இருக்கிறது

சட்டத்தின் நீதியின் ஆட்சி நிலவுகிறது.

நலிவுற்றோர் மீது நாட்டாண்மை செய்யாத சிவில் நிர்வாகம் இருக்கிறது. என்பதெல்லாம் புதுவருடக் கனவுகளாக இருக்கலாம்.

சுதந்திரமாக தன்மானத்துடன் தலைநிமிர்ந்து எதுவித அச்சமுமின்றி எமது சொந்த கடமைகளை செய்கிறோம் கலை கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம் என்றமாதிரியான நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

கல்வியும், அறநெறிச் செயற்பாடுகளும் சாந்தியும் நல்பியல்பும் ததும்பும் வாழ்வொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்.
யுத்தம் சுனாமி இவை இரண்டினாலும் பேரழிவை சந்தித்த மக்களின வாழ்வு ஒளிபெற வேண்டும்.


மானிடர்களின் வாழ்வை பொங்கி பிரவாகிக்கச் செய்வதும் துன்ப சாகரத்தில் உழலச் செய்வதும் அமானுஷ சக்திகள் என்பதை விட மானிட சக்திகளே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரத்தில் உள்ளோர்; பகை வன்மம் பழிவாங்கல் உணர்வுகளுக்குப் பதிலாக நல்லியல்புகளை வெளிப்படுத்தினால் 2011 சிறக்கும் ஒரு மங்கள நிகழ்ச்சியின் கோலாகலமாக வாழ்க்கையை மாற்ற முடியும்.


மனதினில் ஒளியுண்டானால் வாழ்க்கையில் ஒளியுண்டாகும்.

 

தி. ஸ்ரீதரன்                                                அ.வரதராஜப்பெருமாள்

பொதுச்செயலாளர்                                           வடக்கு கிழக்கு மாகாண
பத்மநாபா ஈபிஆர்எல்எவ்                                     முன்னாள் முதலமைச்சர்

 

குடத்தனையில் துப்பாக்கிச் சூடு இளம் குடும்பஸ்தர் பலி

வடமராட்சி குடத்தனையில் நேற்று (31.12.2010) இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். பருத்தித்துறை தபால் நிலையத்தில் தற்காலிக தபால் ஊழியராக பணிபுரியும் தவராஜா கேதீஸ்வரன் (27) என்பவரே பலியானவராவார். நேற்றிரவு இவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த முக மூடியணிந்த இருவரே இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்டவர் புனர்வாழ்வு முகாமிலிருந்து திரும்பியவர்

உரும்பிராயில் கடந்த 30 ம் திகதி கடத்தப்பட்ட இளைஞர் உரும்பிராய் மேற்கை சேர்ந்த சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (வயது 31) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 2007ம் ஆண்டு தனக்கு உயிராபத்து உள்ளதாக கூறி மனித உரிமை ஆணைக்குழுவினரிடம் சரணடைந்த இவர் தெல்லிப்பளை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு 29 ஜுன் 2008 இல் விடுவிக்கப்பட்டவர்.

கோண்டாவில் கிழக்கை சொந்த இடமாக கொண்ட இவர் உரும்பிராய் மேற்கில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர் தனியார் கல்வி நிலையங்களிலும் தனிப்பட்ட வகுப்புக்களிலும் கற்பிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர் என அவரது மனைவி தெரிவித்தள்ளார். கடத்தப்பட்ட இடத்தில் கைவிடப்பட்ட சைக்கிளையும் மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

அல்வாயில் குடும்பப் பெண் கடத்தல்

வடமராட்சியில் அல்வாய் கிழக்கில் நேற்று மாலை 6 பிள்ளைகளின் தாயான புஸ்பாதேவி யோகநாதன் அவரது வீட்டுக்கு வெள்ளைவானில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். கணவனை இழந்த இப்பெண்மணி தனது வீட்டுடன் சிறிய கடை ஒன்றை நடாத்திவந்தார். கடையில் வியாபாராத்தை கவனித்துக்கொண்டிருந்தபோதே இவர் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


 


 

குமுறும் மலையகம்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்

அறிக்கைகள்

துண்டுப்பிரசுரங்கள்

 

எங்கள் சின்னம்

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

Memories of Upali Cooray

 

 

 

13வது திருத்தம்என்றால்?

உங்களின் புதிருக்கு வரதரின் விடை (பகுதி 2)

உதயம் மாத இதழில்  எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்

கூட்டமைப்பு ( DTNA )

21 மே 2009

இந்திய வெளியுறவு செயலர் பாதுகாப்பு ஆலோசகருடன் டிரிஎன்ஏ சந்திப்பு
 


இனப்பிரச்சினை

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான

அரசியற் தீர்வு தொடர்பாக

எமது கட்சியின் விளக்கம்
 

இணைத் தலைமை


ஜெனீவா பேச்சு


மத நிறுவனங்கள்


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

யாழ் - வவுனியா தேர்தல்

வன்னி மக்களின் அவலங்கள்

கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு தனித்தனிக் கட்சிகளாக இணைந்து செயற்படுவதே பலனளிக்கும். புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்: நேர்கண்டவர் பி. வீரசிங்கம்

 மேலும்

 
     
 

'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh